Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 2,731 பேருக்கு கொரோனா தோற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் பாதிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பிறகு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கையை அரசு வெளியிட்டது. அதன்படி இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த இரவு நேரத்தில் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் இயங்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வருகின்ற 9ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து சேவைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரவு நேரங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் பணிக்குச் செல்லும்போது அலுவலக அடையாள அட்டை மற்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வருகின்ற 9ம் தேதிக்குள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |