தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தடுப்பு விதிகளை மீறும் கடைகள், வணிக நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விதிகளை மீறும் கடைகள், வணிக மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் நடவடிக்கை எடுக்கலாம். மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை மீறும் தனிநபர் மற்றும் கடைகள், நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.