அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகின்ற செவிலியருக்கு ஒமைக்ரான் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒருவர் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து அவர் தற்போது கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.
பின்னர் வெளியான பரிசோதனை முடிவில் அவருக்கு புதிய வகையான ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் அமைத்திருக்கும் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.