தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி கொரோனா பரிசோதனைக்கு மாதிரி கொடுத்தவர்கள் முடிவு வருவதற்குள் வெளியே சுற்றித் திரிந்தால் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும் என்று மண்டல அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.