பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ஓராய் என்ற கிராமத்தில் பிரம்மதேவ் மண்டல்(84) என்பவர் வசித்துவருகிறார். இவர் தபால் துறை ஊழியர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார். அதன் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெற்ற சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று 11 டோஸ் தடுப்பு ஊசி போட்டுள்ளார்.
இவர் 12 வது தடுப்பூசி போட சென்ற போது நர்சுகளிடம் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மண்டல், இந்த ஊசி போட்டதும் நான் நன்றாக உணர்ந்தேன். அதான் அடுத்தடுத்து போய் ஊசி போட்டுக்கொண்டேன். மேலும் எல்லோரும் ஊசி போடுங்க அரசு நல்லவேளை செய்துள்ளது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார் . மேலும் இந்த தாத்தா எந்தெந்த தேதியில் எங்கு போய் பூசி போட்டுக் கொண்டோம் என்பதை டைரியில் எழுதி வைத்துள்ளார்.
இந்த தாத்தா 11 டோஸ் பரபரப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது என்று மாதேபுரா மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்டல் தடுப்பூசி போட்டுக்கொண்டது பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு தனிமனிதன் இத்தனை தடுப்பூசிகளை போட எப்படி நிர்வாக அனுமதித்தது, எங்கு தவறு நடந்தது என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.