பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பிரபலமான பல்கலைகழகம் ஒன்றில் மது அருந்துவது மற்றும் மகிழ்வாக வாழ்வது தொடர்பில் ஒரு பட்டப்படிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பட்டப்படிப்பில், மாணவர்களுக்கு, எவ்வாறு மது அருந்த வேண்டும்? மது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அவற்றை எந்த அளவிற்கு அருந்த வேண்டும்? எந்த நேரத்தில் அருந்த வேண்டும்? மது அருந்திய பிறகு எந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்? உண்ணும் உணவு எவ்வாறு இருக்கவேண்டும்? வாழ்வை எப்படி மகிழ்வுடன் வாழ வேண்டும்? என்று கற்றுக் கொடுப்பார்களாம்.
மேலும், உணவகங்களில் உபயோகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், சமயலறைக்குள் பாலின வேறுபாடு இல்லாமல் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? என்பது தொடர்பிலும் விவசாயம் மற்றும் உணவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? என்பது தொடர்பிலும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பட்டப் படிப்பு தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.