Categories
தேசிய செய்திகள்

நடு ரோட்டில்… சிறுமியின் ஆடையை கலைந்த சகோதரர்கள்… உ.பி.யில் தொடரும் கொடுமை..!!

கேலி செய்த இளைஞர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற 17 வயது சிறுமியின் ஆடையை நடுரோட்டில் வைத்து அந்த இளைஞர்கள் கலைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகேயுள்ள சவ்ரி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை, சகோதரர்களான கவுதம், முகேஷ் ஆகியோர் பின்தொடர்வது, சிறுமியை மோசமான வார்த்தைகளால் வசைபாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அச்சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அந்த இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். எனினும் அந்த இளைஞர்கள் தொடர்ந்து இதுபோன்ற மோசமான செய்கைகளில் ஈடுபட்டதால் காவல் நிலையத்தில் புகாரளிக்க முடிவு செய்த சிறுமியின் தந்தை தனது மகள், மருமகளுடன் சவ்ரி சவ்ரா காவல் நிலையம் நோக்கி சென்றார்.

அப்போது குறுக்கிட்ட அந்த இரண்டு இளைஞர்களும் நடுரோட்டில் வைத்து அச்சிறுமியின் ஆடைகளை கலைந்தனர். மேலும் சிறுமியின் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரையும் கீழே தள்ளினர். இதையடுத்து அந்த இளைஞர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர். சமீப காலமாக பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் உ.பி.யில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |