Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாக்கி-டாக்கியை உடைத்த வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

வாக்கி-டாக்கியை உடைத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் டிரைவரான யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரியங்கா அவினாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரிப்பதற்காக யுவராஜின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது யுவராஜ் போலீசாரின் சட்டை பாக்கெட்டில் இருந்த வாக்கி-டாக்கியை எடுத்து சுவரில் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் யுவராஜை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |