Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடுவதற்காக சென்ற மாணவி…. துடிதுடித்து இறந்த சோகம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூப சத்யா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சத்யா தேவி மார்கழி மாதத்தை முன்னிட்டு தினமும் சென்னிமலைபாளையத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளார். வழக்கம்போல சத்யா தேவி விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

இவர் சென்னிமலைபாளையம் நடுதோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி சத்யா தேவியின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சத்யாவின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. அதன்பின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சத்யாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |