வேலை பார்த்து கொண்டிருந்த போது வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளக்கரவாடி பழைய மண்ணை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் 100 நாள் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போதே கணபதி திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கணபதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.