Categories
சினிமா

இதுக்கெல்லாம் என்ன கைமாறு செய்யறதுனு தெரியல…. மாநாடு படத்தை பார்த்து நெகிழ்ந்த இயக்குனர்….!!!!

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் குறித்து பிரேமம் திரைப்பட இயக்குனர் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மாநாடு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட  பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் மாநாடு படத்தை பார்த்த பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

மேலும் மாநாடு படத்தில் சிம்பு மன்மதன் படத்தில் நடித்தது போலவே மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் எனவும் கூறியுள்ளார். மேலும் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை உருவாக்கிய உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

Categories

Tech |