ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்துபோன ஒரு பெண் மயிலை பிரிய முடியாமல் பின்தொடர்ந்து செல்கிறது ஒரு ஆண் மயில். இந்த சம்பவம் காண்பவரை கண்கலங்க வைக்கிறது. கச்சேரா நகரில் ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும் 4 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் பெண் மயில் திடீரென உயிரிழந்தது. அதன் உடலை வனத்துறையினர் எடுத்துச் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற ஆண் மயில், பெண் மயிலை அடக்கம் செய்யும் வரை அருகிலேயே இருந்துள்ளது.