கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு சிலருக்கு காய்ச்சல் அல்லது உடல் வலி ஏற்படுகிறது. அது போன்றவர்களுக்கு பாராசிட்டமால் உள்ளிட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பாராசிட்டமால் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மற்ற கொரோனா தடுப்பூசிகளை போட்ட பிறகு பாராசிட்டமால் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு தேவையில்லை என்று அதை தயாரிக்கும் பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
Categories