நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் இனி வார நாட்களில் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். கடைசி மெட்ரோ ரயில் இரவு 9 மணிக்கு புறப்படும். ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.