தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை தான் அதிகமாக தாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வைத்து கொரோனா குறித்து ஆய்வு செய்யும் குழுவினர்களுடன் ஆலோசனை செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஓமிக்ரான் பெருந்தொற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தான் அதிகமாக தாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்பூசி செலுத்தியவர்களை ஓமிக்ரான் தொற்று தாக்கினாலும் கூட அது உடலில் மிகப் பெரிய அளவில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு மட்டுமின்றி பூஸ்டர் டோஸ்சும், கொரோனா தடுப்பூசியும் அமெரிக்கர்களை பெரும் ஆபத்திலிருந்து காத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.