Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 15 வரை கல்லூரிகளில் நேரடி வகுப்பு ரத்து…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் அனைத்தும் இணைய வழியில் நடத்தப்படும் என்று அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

Categories

Tech |