கனடா நாட்டில் தற்போது நிரந்தர வாழ உரிமம் பெற்றிருக்கும் புலம்பெயர்ந்த மக்கள் தான் அதிக வருவாய் ஈட்டுவது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
அந்த ஆய்வின்படி கடந்த 2018 ஆம் வருடத்தில் கனடா நாட்டில் நிரந்தர வாழிட உரிமம் பெற்ற மக்கள், 2019 ஆம் வருடத்தில் சராசரியாக 31,900 கனடா டாலர்கள் சம்பளம் பெற்றிருக்கிறார்கள். அதன்படி, கடந்த 1981-ஆம் வருடத்திற்கு பின் அனைத்து பிரிவை சேர்ந்த புலம்பெயர்ந்தோர்களிலும் அதிக சம்பளம் வாங்கியவர்கள் அவர்கள் தான் என்று தெரியவந்திருக்கிறது.
கடந்த, 2018-ஆம் வருடத்தில் கனடா நாட்டிற்கு வந்த மக்களில், அங்கேயே கல்வி பயின்று, பணி அனுபவம் பெற்ற மக்கள் அடுத்த வருடத்திலேயே 44,600 கனடா டாலர்கள் சம்பளம் வாங்கி இருக்கிறார்கள். இத்தொகை கனடா நாட்டிலேயே பிறந்து, வாழும் மக்களின் சம்பளத்தை விட அதிகம். இதன் மூலம், கனடா நாட்டில் நல்ல சம்பளம் வாங்க, அந்நாட்டிலேயே கல்வி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பது எவ்வளவு அவசியம் என்று தெரிகிறது.