Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் போராட்டம் எதிரொலி…. 15 நாள் விடுமுறை… எஸ்எம்எஸ் அனுப்பிய பல்கலைக்கழகம்..!!

மாணவர் போராட்டம் எதிரொலியாக  சென்னை பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் 23ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த தாக்குதலை கண்டித்தும் மசோதாவுக்கு எதிராகவும் தமிழகத்தில் நேற்று சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், மதுரை, கோவை உட்பட பல இடங்களில் இந்திய மாணவர் சங்கத்தினரும், மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

Image result for சென்னை பல்கலைக்கழக

இதை தொடர்ந்து டெல்லி  மாணவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் மசோதாவுக்கு எதிராகவும் சென்னை பல்கலை கழக மாணவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நாளை (18) முதல் 24ம் தேதி வரை நடைபெற இந்த வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலை கழகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கிறிஸ்துமஸ் புத்தாண்டையொட்டி டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 1 வரை கல்வியில் ரீதியான பணிகளுக்காக பல்கலைக்கழகத்திற்கு வருவதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. விடுமுறையை மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தகவல் அனுப்பியது பல்கலைக்கழக நிர்வாகம்.

Categories

Tech |