கொரோனா கட்டுப்பாடுகள் பற்றி காவல்துறை சூப்பிரண்டு ஆய்வு செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு முகக்கவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு முககவசம் அணிவித்துள்ளார். இதனையடுத்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளவும் முககவசம் அணிய வேண்டும் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளுக்கு சென்று முககவசம் அணிய வலியுறுத்தியுள்ளார். பின்னர் பல பகுதிகளுக்கு சென்று முகக்கவசம் அணிய வலியுறுத்தி முககவசத்தை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேருந்துகளில் ஏறி பயணிகள் முககவசம் அணிந்துள்ளார்களா என பார்வையிட்டு ஆய்வு செய்து முககவசம் அணியாதவர்களுக்கு முககவசம் வழங்கி உள்ளார். பின்னர் முககவசம் இல்லாத பயணிகளை பேருந்தில் ஏற்றக் கூடாது என ஓட்டுநர் மற்றும் கண்டக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்பேரில் அனைவரும் வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும், கடைகளில் கிருமிநாசினி வைத்திருக்குமாறும், சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடை, தியேட்டர்கள் போன்ற பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.