43 ஆண்டுகளில் இல்லாத அளவாக சீனாவில் கடந்த 2020 ல் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.52 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. ஆனால் சமீபகாலமாக சீனாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதன்படி கடந்த 2020 ல் சீனாவிலுள்ள ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.52 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2020 ல் சீனாவிலுள்ள 10 மாநிலங்களிலும் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழேகவே உள்ளது. இதனை சரிசெய்ய சீன அரசாங்கம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது சீன தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் அதற்காக மானியங்கள், பேறுகால விடுமுறைகள் போன்ற பல சலுகைகளையும் அந்நாடு அரசு சீன தம்பதியினருக்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.