பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லெவிஞ்சிபுரம் பகுதியில் ஆனந்த கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அந்தோணியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் கூலித் தொழிலாளியான சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தோணியம்மாளின் வீட்டின் அருகில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்துள்ளார்.
இதனை அந்தோணியம்மாள் மற்றும் அவரது கணவரான ஆனந்த கண்ணன் ஆகிய இருவரும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுடலை அந்தோணியம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்தோணியம்மாள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுடலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.