தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கும் இரங்கல் தீர்மானம் செய்யப்பட்டது. மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இன்று முதல் முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கேள்வி நேரத்தில் முதல் கேள்வியாக பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு, மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் உள்ளது என்று பதிலளித்துள்ளார்.