தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
அப்போது, தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.