அமெரிக்காவில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் பென்சில்வேனியா என்னும் மாகாணத்தில் உள்ள பிலதெல்பியா பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீ, அதன் பின்பு கட்டிடம் முழுக்க வேகமாக பரவியது. எனவே தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 50 நிமிடங்கள் போராடி தீயை அணைத்திருக்கிறார்கள்.
எனினும், குழந்தைகள் உட்பட 13 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நெருப்பை கண்டறியக்கூடிய கருவிகள் 4 இருந்தும், அவை வேலை செய்யாததால் தான் 13 பேர் பலியாகி இருக்கின்றனர் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.