Categories
உலக செய்திகள்

போலந்து அதிபருக்கு மீண்டும் கொரோனா…. மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!!

போலந்து நாட்டின் அதிபருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து அதிபர், ஆண்ட்ரெஜ் துடாவின் அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனையடுத்து அதிபர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் அவருக்கு அதற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு, கடந்த 2020 ஆம் வருடம், அக்டோபர் மாதத்திலும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டாவது தடவையாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனினும், அவர் உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் கடந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே கொரோனாவிற்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டார். மேலும் கடந்த மாதம் பூஸ்டர் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |