Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நிலைமை மிக மோசமாகிவிட்டது…. WHO கடும் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் வாரங்களில் உச்சத்தை எட்டும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி எச்சரித்துள்ளார் .

இந்தியாவில் கொரோனா தொற்று காட்டுத்தீ போல் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை அடுத்த இரண்டு வாரங்களில் உச்சத்தை அடையும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் இன்னும் இரண்டு வாரங்களில் மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து விடும் எனவும் இரண்டாவது அலையில் நோயாளிகளுக்கு படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டது போல் மூன்றாவது அலையிலும் நிச்சயமாக அவ்வாறு நடக்கும் என அவர் கூறியுள்ளார். எனவே அனைத்து மருத்துவமனைகளையும் தயாராக வைத்திருக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |