தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களை கலைப்பதற்கான சட்ட திருத்த மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் தொடர் முறைகேடு புகார் எதிரொலியாக தமிழக அரசு இந்த முடிவு எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில் 4,451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.