Categories
மாநில செய்திகள்

சூப்பர் திட்டம்….. கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ்……!! தொடங்கி வைத்தார் முதல்வர்…..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்ல சிறப்பு அம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை இன்று மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னையில் மட்டும் 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |