தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற நிலை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாமை அரசு ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மதுரையில் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் நாளை காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மதுரை கோ புதூரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து தேவையான சான்றிதழ் சமர்ப்பித்த பிறகு முகாமில் பங்கேற்கலாம். அதுமட்டுமில்லாமல் இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் ஐடிஐ மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
இந்த முகாமில் வெளிநாட்டவர்கள் கூட தங்கள் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கல்வி சான்றிதழ்கள், குடும்ப அடையாள, அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வரவேண்டும். இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் துணை இயக்குனர் ந.மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.