தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு இரவு நேர ஊரடங்கை அமல்ப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதிக்கான முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்பதால் முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 9-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்காது என்பதால் அன்று முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பித்தர ஏற்பாடு செய்துள்ளது.