Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் ஆபாச புகைப்படம்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை கணவருக்கு அனுப்பி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் அஸ்வின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதன்பின் இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து கொண்டனர். இதனை அடுத்து அஸ்வின் சில நேரங்களில் வீடியோ காலில் அந்த பெண்ணை ஆடையின்றி நிற்க சொல்லி அதனை தனது செல்போனில் புகைப்படமாக பதிவு செய்து வைத்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் அந்த இளம்பெண் அஸ்வினுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமான பிறகும் அஸ்வின் தொடர்ந்து பேசுமாறு அவரை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அந்த இளம்பெண் பேசாததால் கோபமடைந்த அஸ்வின் தனது செல்போனில் வைத்திருந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அவரது கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த இளம் பெண்ணின் கணவர் உடனடியாக கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஸ்வினை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |