கஜகஸ்தானின் பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்தும் கூட எரிபொருள் உயர்வை முன்னிட்டு நடத்தப்பட்ட கலவர போராட்டத்தை கைவிடாத ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த அந்நாடு ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளது.
கஜகஸ்தானின் பிரதமரான அஸ்கர் மாமின் அந்நாட்டில் எரிபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்து கலவர போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.
இந்த போராட்டத்தின் காரணமாக தலைநகர் சுல்தான் உட்பட பல முக்கிய பகுதிகளில் இணையதளம் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கஜகஸ்தான் நாட்டின் பிரதமரான அஸ்கர் தான் பதவி விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் போராட்டத்தை கைவிடாத ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 2 அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், இவர்களை கட்டுப்படுத்த அந்நாடு ரஷ்யாவிடம் உதவி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.