Categories
தேசிய செய்திகள்

“சிம் ஸ்வாப் மோசடி வழக்கு”…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!!!

மருத்துவமனையின் வங்கி கணக்கில் இருந்து ரூ 24 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிம் ஸ்வாப் முறையில் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்தார். இதையடுத்து மருத்துவனை பெயரில் இருந்த சிம் கார்டு எண்ணை மோசடி கும்பல் வாங்கியது எப்படி?.. என்று தனியார் தொலைதொடர்பு நிறுவன அதிகாரிகளிடம் சைபர் கிரைம் விசாரணை நடத்தினர்.

அப்போது போலி ஆவணங்கள் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை உருவாக்கியுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. போலி ஆதார் அட்டை தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். சிம் ஸ்வாப் மோசடியில் கைதான 4 பேரில் ஒருவருக்கு மட்டுமே கொள்ளையில் நேரடித் தொடர்பு இருக்கிறது. மற்ற 3 பேரும் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்டதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |