ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைபர்சோனிக் வகை ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய ஹைபர்சோனிக் வகை ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக அந் நாட்டு அரசின் செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஹைபர்சோனிக் வகை ஏவுகணை 720 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் வடகொரிய அரசாங்கத்தின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.