Categories
தேசிய செய்திகள்

#BREAKING: “பில்லி பாய் செயலி”…. முக்கிய குற்றவாளி கைது…. போலீஸ் அதிரடி….!!!!

முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை அவர்களின் அனுமதி இல்லாமல் பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் செயலி குறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இந்த புல்லி பாய் செயலி மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சாப்ட்வேர் பகிர்வு தளமான கிட் ஹப் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது.

இதில் சில பெண்களின் போட்டோக்களை பதிவிட்டு ‘டீல் ஆப் தி டே’ என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சி இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த செயலி முடக்கப்பட்டுள்ளது. இந்த செயலிக்கு பலரும் கடன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ‘புல்லி பாய்’ செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோவை(21) அசாம் மாநிலத்தில் வைத்து டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

Categories

Tech |