மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாளாக இருக்கும். நாணயத்தை இன்று கூடுமானவரை காப்பாற்றி விடுவீர்கள். வாரிசுகளுக்கு வேலை கிடைத்து, வருமானம் கூடுதலாகவே இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர் வழி ஒத்துழைப்பும் இருக்கும். இன்று அரசியல் துறையினருக்கு உங்களது வார்த்தையின் மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைப்படி உடனிருப்பவர்கள் கேட்டு செயல்படுவது மனதிற்கு இதத்தை கொடுக்கும். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை கொஞ்சம் வெளிப்படும். பாராட்டுகளும் கிடைக்கும்.
அதுமட்டுமில்லாமல் உழைப்பு அதிகமாகவே இருக்கும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கூடுதல் கவனம் இருப்பது மட்டும் எப்போதுமே அவசியம். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அது மட்டுமில்லாமல் சில விஷயங்களை கையாளும் பொழுது நீங்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். அதை கவனத்தில் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கூட ஓரளவு சிறப்பு இருக்கும். உங்களுடைய நிதி மேலாண்மை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
செயல்பாடுகளிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு அனைத்து காரியத்தையும் செய்யுங்கள். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்