இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதால் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நமச்சிவாயபுரம் வீரன்கோவில் தெருவில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜன் கல்யாண சோழபுரம் பகுதியிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து நமச்சிவாயபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறிய தியாகராஜன் கீழே விழுந்துவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்த தியாகராஜனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தியாகராஜன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.