Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பலூன் வாங்கி கொடுத்த தொழிலாளி…. பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 4-6-2020 அன்று நடராஜ் 7 வயது சிறுமிக்கு பலூன் வாங்கிக் கொடுத்து தனியாக அழைத்துச் சென்று முட்புதரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அவினாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நடராஜ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்தில் தனியாக அழைத்துச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் நடராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

Categories

Tech |