பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா காங்கிரஸ் தெரிவித்த கருத்தை 5 மாநிலங்களுக்கு தெரியப்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்.
காங்கிரசின் தமிழ் மாநில தலைவரான கே.எஸ் அழகிரி, “ஸனாதன தர்மம் சமூகத்தில் இருக்கக்கூடிய வேறுபாடுகளை நியாயப்படுத்துகிறது. அது, இந்து மதத்தில் இடையில் சேர்க்கப்பட்டது. நாகரீக சமூகம் எதுவும் இதனை ஏற்றுக் கொள்ளாது. இதுவே காங்கிரஸின் கொள்கை” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பாஜக செய்தி தொடர்பாளரான நாராயணன் திருப்பதி இது குறித்து தெரிவித்திருப்பதாவது, “ஸனாதன தர்மம் என்பது மதம் கிடையாது. வாழக்கூடிய முறை. நம்பிக்கை மற்றும் பண்பாடு. அதற்கு இடையில் செருகப்பட்டது தான் இந்து மதம். இந்து என்பது ஒரு மதமே கிடையாது.
காங்கிரஸ் தான், ஆங்கிலேயர்களுடன் இணைந்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. மகாத்மா காந்தி, “தான் ஒரு ஸனாதன இந்து” என்று கூறினார். அவரை, கே.எஸ் அழகிரி நாகரிகம் இல்லாதவர் என்று கூறுகிறாரா? என்று கேட்டிருக்கிறார்.
எச் ராஜா கூறியதாவது, “இதுபோல் பேச ராகுலுக்கு துணிச்சல் இருக்கிறதா? உத்திரப்பிரதேச தேர்தலில், ராகுல் இவ்வாறு பேசுவாரா? நீங்கள் இவ்வாறு இந்துக்களுக்கு விரோதமாக பேசுவதை மொழிபெயர்த்து ஐந்து மாநிலங்களின் மக்களுக்கும் தெரியப்படுத்துவோம்” என்று கூறியிருக்கிறார்.