மிதுன ராசி அன்பர்களே….!!! இன்று சிந்தனைகள் வெற்றிபெற சிவாலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள் ஆக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பான பயணம் செல்ல நேரிடும். போட்டிகள் விலகிச்செல்லும். வாடிக்கையாளர்களுக்கு மாற்றுக்கருத்துகள் சொல்லாமல் அனுசரித்து செல்வது நல்லது.
அனைத்து விஷயங்களிலும் கொஞ்சம் பொறுமையை கையாளுங்கள், மேற்கொண்டு சிறப்பாக இருக்கும். இன்று ஆலயம் சென்று வாருங்கள் மனம் அமைதியாக இருக்கும். இன்று கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். இதனால் சில விஷயங்கள் சிறப்பாக உங்களுக்கு நடந்து முடியும். இன்று வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பயணம் ஓரளவு அலைச்சலை கொடுக்கக் கூடியதாக இருந்தாலும் நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும்.
இன்று மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை ஓங்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாக இருக்கும்.