தமிழக கோவில்களில் உள்ள சிலைகளை வணங்குகிறார்களோ இல்லையோ, களவாடி விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். தமிழகத்தில் பழமையான கோவில்களில் உள்ள ஏராளமான சிலைகள் காணாமல் போனது. எனவே இது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொன்மாணிக்கவேலை நியமித்திருந்தது. அவர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து பல சிலைகளை கண்டுபிடித்தார்.
இந்நிலையில் தமிழக தெய்வ சிலைகளை வெளிநாடுகளில் காட்சிப்பொருளாக வைத்துள்ளனர். மேலும் சென்னையிலும் அருங்காட்சியகத்தில் 2,000 சிலைகள் காட்சி பொருளாக வைத்துள்ளனர் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.