கடக ராசி அன்பர்களே…!! இன்று நூதன பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்கள் சிலரால் விரயம் உண்டாகும். வரவு திருப்திகரமாக இருக்கும். அயல்நாட்டு முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருள்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது.
அரசியல் துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று கோபத்தை குறைப்பது நன்மையை கொடுக்கும். வேலைகளை கவனமுடன் செய்யுங்கள், பொறுமையாக செய்யுங்கள், நிதானமாக செய்யுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். கூடுமானவரை பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லை. இருந்தாலும் படிக்கும் பொழுது படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்கு எழுதிப்பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு