Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு பின்னரே அனுமதி…. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு…. நகராட்சி சார்பில் அறிவிப்பு….!!

கொரோனா 3-ஆம் அலை தடுப்பதற்க்கான பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தேனி மாவட்டத்தில் கொரோனா 3-ஆம் அலை தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஒமைக்ரான் வைரஸ் அத வேகமாக பரவி வருவதால் தமிழக-கேரள எல்லையான குமுளியில் சுகாதாரத் துறையினர் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களை பரிசோதித்த பின்னரே அவர்களை அனுமதிக்கின்றனர்.

இதனையடுத்து கூடலூர் நகராட்சி சுகாதாரதுறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளனர். மேலும் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

Categories

Tech |