Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கட்டாயம் அணிய வேண்டும்…. தடுப்பு நடவடிக்கைகள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

கடைவீதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்துள்ளார். அப்போது பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் முககவசம் வழங்கி கட்டாயமாக அணிய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுப் பவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து வாலாஜா பேருந்து நிலையத்தில் நகராட்சி மூலமாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்குவதை தொடங்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களிடம் அடிக்கடி கை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் முககவசம் அணிவது குறித்தும், அதிகமான ஆட்களை ஆட்டோக்களில் ஏற்றாமல் இயக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Categories

Tech |