பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனவரி 12ஆம் தேதி அன்று தமிழகத்திற்கு வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மதுரையில் பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் மதுரையில் வரும் 12-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறியுள்ளார்.