வாகனங்களை திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனம் தொடர்ந்து திருட்டுப் போனது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து வெளிப்பாளையத்தில் ஒரு குடோனில் திருடப்பட்ட அனைத்து வாகனங்களையும் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரமணன், செல்சன் உள்ளிட்ட 3 நபர்களை கைது செய்ததோடு அவர்களிடமிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.