சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று தொழில் போட்டிகள் அகலும் நாளாக இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வீடுவாங்க போட்ட திட்டங்கள் சிறப்பாக நடக்கும். மன குழப்பம் அகன்று மகிழ்ச்சி கூடும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும், பணவரவு அதிகமாகி பொருளாதாரம் ஓங்கி நிற்கும்.
முயற்சிகளில் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனம் ஆக செயல்படுவீர்கள். மதிப்பு மரியாதை உயரும். கடன் பிரச்சினைகளில் இருந்தும் நீங்கள் இன்று விடுபடுவீர்கள். அதுமட்டுமில்லாமல் கடன்களை அடைக்க கூடிய சூழலும் இன்று இருக்கு. இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். அக்கம்பக்கத்தினர் இடமும் அன்பு அதிகரிக்கும். இன்று செய்யும் செயலில் நேர்த்தியும் இருக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியாக காணப்படக் கூடிய சூழல் இருக்கு. இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். தடைகள் விலகி செல்லும்.
அவர்கள் செய்யும் விஷயங்கள் அனைத்துமே சிறப்பாக காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் சேர வழிபட்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.