Categories
மாநில செய்திகள்

ஆன்மிகவாதிகளை அரவணைத்த திமுக…! நிரூபித்து காட்டிய முக.ஸ்டாலின்…. மனம் குளிர்ந்த இந்துக்கள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத் துறை  சார்பில்…. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டியகும்பாபிஷேகங்கள், 12 ஆண்டுகள் கழித்து நடைபெறாமல் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கும்,

நெடுங்காலமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கின்ற திருகோவில்களையும் நேரடியாக சென்று ஆய்வு செய்து, காலதாமதத்தை போக்கி விரைவுபடுத்தவும், 12 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க கோவில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி,

நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் பகவானுக்கு 1 லட்சத்து 8 வடமாலை சாத்துகின்ற நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து நரசிம்மரை தரிசித்து விட்டு, அதை தொடர்ந்து ரங்கநாதசுவாமி தசித்துவிட்டு வருகிறோம், இதை தொடர்ந்து பல நெடு ஆண்டு காலமாக நிலுவையில் இருக்கின்ற நயினார் திருக்கோவிலுக்கு உண்டான மலை பாதையில்  பக்தர்கள் வெகுவாக சென்று தரிசனம் செய்வதற்கு, பாதை அமைக்கிற பணி வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது.

ஆன்மிகத்தின் ஒரு பகுதியாக இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு…. திராவிட முன்னேற்றக் கழகம் இந்த முறை ஆட்சி பொறுப்பேற்றவுடன்….  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர்,  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு வருகின்ற இந்தப் பணிகளில் ஒரு பகுதியாகத்தான் ……

கொரோனா நோய்த்தொற்று என்பது ஒருபுறம் இருந்தாலும், இறை அன்பர்கள் மகிழ்ச்சி  அடைகின்ற வகையில் வருகின்ற…. இந்த 2022ஆம் ஆண்டு எல்லா வகையிலும் மக்களுக்கு சிறந்தோங்க அவரவர் விரும்புகின்ற வழிபாட்டு தலங்களுக்கு சென்று முழு அமைதியுடன், சுதந்திரத்துடன் வழிபட வேண்டி  31தேதி தொடங்கி 1-ஆம் தேதி இரவு 12 மணி வரையிலும் தரிசனத்திற்காக அனுமதி அளித்தது இறை அன்பர்கள் மத்தியிலே….  அவர்கள் மனம் குளிர்கின்ற வகையிலே இந்த அரசு ஆன்மிகத்திற்கு எதிரான அல்ல, ஆன்மீகவாதிகளின் அரவணைத்து செல்லுகின்ற ஒரு அரசு என்பதை நிரூபித்து இருக்கின்றோம் என தெரிவித்தார்.

Categories

Tech |