பூமிகா தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை பூமிகா ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து சூர்யா நடிப்பில் வெளியான ”சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.
இவர் கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், பூமிகா தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.