வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை பிடிக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுவாடி கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 5 வயதுடைய முதலை பாலத்தின் மீது ஊர்ந்து சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே முதலையை பிடித்து செல்லுமாறு பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தரை பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.